ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு மற்றொரு தடை.
ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணத்தில் பசுமையான இடங்களைக் கொண்ட பூங்காக்கள் அல்லது உணவகங்களுக்குள் பெண்கள் நுழைய தலிபான் பயங்கரவாத அமைப்பு தடை விதித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது போன்ற இடங்கள் ஆண்களும் பெண்களும் கலந்திருப்பதாகவும், பெண்கள் ஹிஜாப் அணிவதில்லை என்றும் மத குருமார்கள் கூறிய புகார்களே இதற்கு காரணம்.