பணவீக்கத்தில் இலங்கைக்கு பத்தாவது இடம்!

உலகில் அதிக உணவுப் பணவீக்கம் உள்ள நாடுகளில் இலங்கை 10ஆவது இடத்திற்கு பின்சென்றுள்ளதாக உலக வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு செப்டம்பரில், பணவீக்கம் உச்சத்தில் இருந்தபோது, ​​சிம்பாப்வே மற்றும் லெபனானுக்கு அடுத்ததாக இலங்கை காணப்பட்டது.

இந்நிலையில், தற்போது 139% என்ற அளவில் உலகிலேயே அதிக உணவுப் பணவீக்கம் கொண்ட நாடாக லெபனான் பதிவாகியுள்ளது. 

உணவுப் பணவீக்கம் 59 வீதத்துடன் இலங்கை, பட்டியலில் பத்தாவது இடத்தில் உள்ளதாக உலக வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.