அவசர சிறுநீரக மாற்று சிகிச்சைக்காக உதவி கோரல்!
களுத்துறை மாவட்டத்தின் வியங்கல்லை கிராமத்தைச் சேர்ந்த 58 வயதுடைய மொஹமட் ஹரீஸ் நீண்ட காலமாக சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். மூன்று பிள்ளைகளின் தந்தையான ஹரீஸின் சிறுநீரகம் செயலிழந்துள்ளதாக வைத்தியர்கள் அண்மையில் தெரிவித்துள்ளனர். சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சையினை அவசரமாக மேற்கொள்ளுமாறு வைத்தியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதுவரை ஹரீஸ் டயலைஸிஸ் சிகிச்சையினை மேற்கொண்டு வருகிறார். நீண்ட காலமாக சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்தமையினால் ஹரீஸினால் தொழில் எதனையும் மேற்கொள்ள முடியவில்லை. இதன் காரணமாக அவரிடம் போதிய பொருளாதார வசதிகளின்மையினால் டயலைஸிஸ் சிகிச்சையினைக்கூட பிறரது உதவியுடனேயே பல்வேறு சிரமத்துக்கு மத்தியில் மேற்கொண்டு வருகிறார்.
இவ்வாறான பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் ஹரீஸுக்கு அவசரமாக சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சையினை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. ஹரீஸுக்கு தேவையான சிறுநீரகத்தை பெற்றுக் கொள்வதற்கும், சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்குமாக அறுபது (60) இலட்சங்கள் தேவைப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இதுவரை காலமும் யாரிடமும் கையேந்தாத ஹரீஸ் தனது சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்குத் தேவையான நிதியினை தன்னாலோ தனது குடும்பத்தினராலோ திரட்டிக் கொள்ள முடியாத நிலையில் பிறரது உதவியை எதிர்பார்க்கும் நிலைக்கு நிர்பந்திக்கப்பட்டுள்ளார். இதற்கான பாரிய நிதியினை நல்லுள்ளம் படைத்தவர்களிடமிருந்து ஹரீஸ் எதிர்பார்க்கின்றார். சிறுதுளி பெருவெள்ளம் என்ற வகையில் உங்களால் இயலுமான நிதியுதவியினை இந்த பரக்கத் மிக்க ரமலான் மாதத்தில் வழங்கி மூன்று பிள்ளைகளின் தந்தையின் உயிரைக் காப்பாற்ற முன் வாருங்கள்.
இறைவன் நம் அனைவரையும் இது போன்ற பாரிய கொடிய நோய்களிலிருந்து பாதுகாப்பானாக (ஆமீன்) ஜஸாக்கல்லாஹு ஹைரா.
தகவல்: ரூமி ஹாரிஸ்,
0716666699,
0767810699
நோயாளியின் விபரம்:
M. T. Mohamed Harees, No. 32/01, Veyangalla, Agalawatta. ☎️ 0777901549.
வங்கிக் கணக்கு விபரம்: M.T. MOHAMED
A/C.NO. 8220904914
கருத்துகள்
கருத்துரையிடுக