நிலக்கரிக்கு தட்டுப்பாடு ஏற்படாது. அமைச்சர் காஞ்சன!

 நிலக்கரிக்கு தட்டுப்பாடு ஏற்படாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர உறுதியளித்துள்ளார்.

 நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்துக்கு தேவையான 22 நிலக்கரி கப்பல்களை இலங்கை நிலக்கரி நிறுவனம் கொள்வனவு செய்துள்ளது.

 அதன்படி 23ஆவது கப்பல் இறக்கப்படுகிறது. இந்நிலையில் மின்சார சபையினால் கணிக்கப்பட்டுள்ள உற்பத்தித் திட்டத்தின் படி 30 நிலக்கரி கப்பல்கள் தேவைப்படுவதுடன் அவற்றில் 24, 25 மற்றும் 26 கப்பல்கள் ஏற்கனவே புத்தளத்தை வந்தடைந்துள்ளன.

 27, 28 மற்றும் 29 ஆகிய கப்பல்கள் மே 1ஆம் திகதிக்கு முன் வந்து சேர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மேலும், 30ஆவது கப்பல் மே முதல் வாரத்தில் வரவுள்ளது.

 இவ்வாறாக கடந்த காலங்களில் தொழிற்சங்கங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட பொய்யான தவறான பிரசாரங்கள் தோல்வியடைந்துள்ளன.

 லக்விஜய மின் உற்பத்தி நிலையம் அதிகபட்ச கொள்ளளவில் இயங்குவதற்கு தேவையான அளவு நிலக்கரியை பெற முடியும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.