பண்டிகை காலங்களில் கோழி மற்றும் முட்டை விலைகள் அதிகரிப்பு


எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை உயர்வை தவிர்க்க முடியாது என அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.

தேவைக்கு ஏற்ப விநியோகத்தை வழங்குவதில் உள்ள சிரமம் காரணமாக கோழி இறைச்சியின் விலை கிலோ ஒன்றுக்கு 1,200 ரூபாவில் இருந்து 1,400 ரூபாவாக அதிகரிக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அஜித் குணசேகர இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


“.. வணிக வலையமைப்பு முற்றிலுமாக முடங்கியுள்ளது. இவை அழிந்துபோகும் பொருட்கள். வலுவான வர்த்தக வலையமைப்பு இல்லாதபோது விலை ஏற்ற இறக்கத்தை தடுக்க முடியாது. புத்தாண்டின் போது நீண்ட விடுமுறை கிடைக்கும். அதன்பிறகு பண்டிகை காலம் வரும். தேவை அதிகரிக்கிறது. தேவையை வழங்க முடியுமா என்பதில் எங்களுக்கு சிக்கல் உள்ளது. பின்னர் சப்ளை மற்றும் தேவைக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்படும். ஒரு கிலோ கோழிக்கறி ரூ.1,200 முதல் ரூ.1,400 வரை ஏற்ற இறக்கமாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம்..”

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.