குரங்குகளை சீனாவுக்கு அனுப்புவது தொடர்பில் அமைச்சரவை குழு நியமனம்.

இலங்கையில் உள்ள குரங்குகளை சீனாவில் உள்ள விலங்கியல் பூங்காக்களுக்கு வழங்குவது தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினை அமைச்சரவையில் முன்வைக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக, அமைச்சரவையினால் குழுவொன்று நியமிக்கப்படும் என்றும் அந்த அமைச்சு கூறியுள்ளது.

இதேவேளை, குரங்குகளை சீனாவுக்கு வழங்குவது தொடர்பில், ஆராய்வதற்காக வனவளத்துறை, நீதி பெருந்தோட்ட மற்றும் விவசாய அமைச்சுக்களை சேர்ந்த 4 அதிகாரிகள் கொண்ட குழு அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.