இரசாயன உரங்கள் மீதான தடையினால் விளைச்சல்களில் வீழ்ச்சி!
இரசாயன உரங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதால், 2021-ம் ஆண்டு பருவத்தில் ஒரு ஏக்கரில் நெல் விளைச்சல் 53 சதவீதம் குறைந்துள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
இரசாயன உரங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையால் பயிர்ச்செய்கையில் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில் ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
மேலும், இரசாயன உரங்களுக்கு விதிக்கப்பட்ட தடையால் உருளைக்கிழங்கு, கிழங்கு விளைச்சல் 52 சதவீதமும், சோளத்தின் விளைச்சல் 68 சதவீதமும் குறைந்துள்ளது. மிளகாய் விளைச்சலும் 43 சதவீதம் குறைந்துள்ளது.
கருத்துரையிடுக