மீண்டும் தலைதூக்கும் கொவிட்!

மீண்டும் தலைதூக்கும் கொவிட்!

இந்தியாவில் திடீரென கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அந்த நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் 5,880 புதிய கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்திய சுகாதார அமைச்சின் தரவுகளை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியாகியுள்ளது.
நாளாந்தம் சுமார் 5000 வரையிலான கொவிட் தொற்றாளர்கள் புதிதாக பதிவாகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

XBB.1.16 என அடையாளப்படுத்தப்படும் கொவிட் திரிபொன்றே இவ்வாறு பரவி வருகின்றமை அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் குறிப்பிடுகின்றன.
அத்துடன், இந்தியாவில் தற்போது 32,814 பேர் தற்போது கொவிட் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேவேளை, டெல்லியில் கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் 4 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் தினங்களில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அந்த நாட்டு சுகாதார அமைச்சு அச்சம் வெளியிட்டுள்ளது.
எவ்வாறாயினும், சன நெரிசல் மிக்க பகுதிகளில் முகக் கவசத்தை அணியுமாறும், தடுப்பூசிகளை உரிய வகையில் செலுத்தி;க் கொள்ளுமாறும் இந்திய சுகாதார அமைச்சு, பொதுமக்களிடம் கோரியுள்ளது.

கருத்துகள்