நோயாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

காலி - கராபிட்டிய வைத்தியசாலை CT ஸ்கேனர் இயந்திரங்கள் இரண்டும் பழுதடைந்ததால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

கடந்த வருடம் ஒரு இயந்திரம் செயலிழந்ததாகவும், மற்றைய இயந்திரம் சில மாதங்களுக்கு முன்னர் செயலிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆனால், அதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்காததால் நோயாளிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

அதன் காரணமாக நோயாளிகள் தனியார் மருத்துவமனைகளில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.