இலங்கை முஸ்லிம் சேவையில் எதிர்வரும் 22. 04. 2023 சனிக்கிழமை (நோன்பு பெருநாள் அன்று காலை 9:00am) நோன்புப்பெருநாள் கவியரங்கு ஒலிபரப்பாகும்.
ஆறு கவிஞர்கள் கலந்து கொள்ளும் ,அக்கவியரங்குக்கு கவிஞர் கலாபூஷணம் யாழ் அஸீம் தலைமை தாங்குகிறார்.
“மாற்றம் தர வந்த மாண்புற்ற ரமழானே!”
என்னும் தலைப்பில் ,இடம்பெறும் ,அக்கவியரங்கில் கவிஞர் நபீல் அபாபீல், பர்ஹத் சித்தீக், கலாபூஷணம் மலாய்க்கவி டிவங்ஸோ, தெல்தோட்ட நூருல் இஸ்ரா, ஸிபானியா பௌஸூல், பயாஸா பாஸில் ஆகியோர் கவிதை பாடுகின்றனர்.
முஸ்லிம் சேவை பணிப்பாளர் எம். ஜே. பாத்திமா ரினூஸியாவின் மேற்பார்வையில் ஏ.எம் முஹம்மத் ரலீம் தயாரித்தளிக்கிறார்.
கருத்துரையிடுக