இலங்கையில் தற்போது நிலவும் அதிக வெப்பத்திற்கான காரணம்   சூரியனில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சின் அதிக தாக்கமே  என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை குறைந்தளவான மேகங்கள் மற்றும் காற்றானது இலங்கையில் வெப்பம் அதிகரிப்பதற்கான ஏனைய காரணங்களாகும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் தற்போதைய காலப்பகுதியில், இதுபோன்ற நிகழ்வுகள் வழமையானவையாகும்.

நேற்றைய தினம் பல பிரதேசங்களில் அதிகபட்ச வெப்பநிலை உயர்வாக காணப்பட்டதுடன், பொலனறுவையில் 36.6 பாகை செல்சியஸாகவும், வவுனியாவில் 35 பாகை செல்சியஸாகவும், வெப்பநிலை பதிவாகியுள்ளது.

அதிக வெப்பம் குறித்து பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு மே மாதம் நடுப்பகுதி வரை இலங்கையில் வெப்பம் தொடரலாம் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் ஆய்வுகளின் படி தெரியவருகிறது.

இதேவேளை, பாடசாலை விடுமுறை முடிவதற்குள் வயிற்றுப்போக்கு உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்த நாட்களில் குழந்தை காய்ச்சலுடன் வாந்தி எடுத்தால் மற்றும் வயிற்றுப்போக்கு இருந்தால், நீரிழப்புக்கு அதிக வாய்ப்பு உள்ளது.

எனவே குழந்தைகளுக்கு இயற்கையான திரவ உணவுகளை அதிகம் குடிக்கக் கொடுங்கள். குறிப்பாக பழச்சாறு, இளநீர், நாரணம், மாதுளை, இனிப்பு, பலாம்பழம் போன்றவை நீரிழப்பை தடுக்கும் என்பதால் அவற்றினை கொடுப்பது சிறந்தது என்றும் கூறியுள்ளார்.

அத்துடன் ஆசிய பசுபிக் சமூக சுகாதார அமைப்பின் பொதுச்செயலாளர் மற்றும் பேராசிரியருமான கருணாதிலக இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் “குழந்தைகளிடையே ஒருவித மயக்கம், அல்லது தாகம், வாந்தி போன்ற அறிகுறிகள் இருந்தால், அதனை உடனடியாக நிவர்த்தி செய்வது அவசியம்.

இந்த கடுமையான வெயிலில் வெளியில் செல்பவர்கள் தொப்பி மற்றும் குடைகள் போன்றவற்றைப் பயன்படுத்துவது முக்கியம்.

மேலும் அணியும் ஆடைகள் வெளிர் நிறங்களைப் பயன்படுத்தினால் நன்றாக இருக்கும். அத்துடன் இந்த நாட்களில் அதிகளவான தண்ணீரைப் எடுத்துக்கொள்வது நல்லது என அவர் குறிப்பிட்டுள்ளார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.