துறைமுக அதிகார சபையின் வருடாந்த இப்தார் நிகழ்வு இலங்கை துறைமுக அதிகார சபையின் ஊழியர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்த இப்தார் நிகழ்வு கடந்த செவ்வாய்க்கிழமை (18) கொழும்பு 10 மருதானையில் அமைந்துள்ள சௌஷா கிரேண்ட் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. 

முஸ்லிம் மஜ்லிஸின் ஏற்பாட்டில், முஸ்லிம் மஜ்லிஸின் தலைவர் இல்ஹாம் மஷுர் மௌலானாவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் நிமால் சிறி பாலடி சில்வா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

மேலும் அமைச்சின் செயலாளர், துறைமுக அதிகார சபையின் முகாமைத்துவப் பணிப்பாளர் உட்பட அங்கு கடமையாற்றும் பிரிவுகளுக்குப் பொறுப்பான தலைவர்கள், பணிப்பாளர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள், முஸ்லிம் ஊழியர்கள், முஸ்லிம் மஜ்லிஸின் உப தலைவர் வை.பீ.ஏ.றஸாக், செயலாளர் ஏ.எல்.எம்.சும்ரி, பொருளாளர் எம்.சி.எம். டில்ஷாத் மற்றும் முஸ்லிம் மஜ்லிஸின் நிர்வாக உறுப்பினர்கள் என 700க்கு மேற்பட்டவர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.