லண்டன் கொஸ்மாஸ் அமைப்பினால் வைத்திய உபகரணங்கள் - முஸ்லிம் கவுன்ஸில் தலைவர் அமீனிடம் உறுதி!

லண்டனிற்கு விஜயம் செய்துள்ள முஸ்லிம் கவுன்சில் ஓப் சிறிலங்காவின் தலைவர் என்.எம் அமீன் லண்டனில் இயங்கும் இலங்கை முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் (கொஸ்மோஸ்) சாகிர் நவாஸ் மற்றும் அதன் செயலாளர் சிபான் நயீம் ஆகியோரினைச் சந்தித்து இரு அமைப்புகளுக்கும் இடையில் நெருங்கிய தொடர்புகளைப் பேணுவது பற்றி உரையாடினார்கள்.  இலங்கையில் உள்ள வைத்தியசாலைகளு க்கு சில்வியா லங்கா பவுன்டேசனூடாக கொஸ்மோஸ் ஆதரவுடன் பகிர்ந்தளிக்கும் வைத்தியசாலை உபகரணங்கள் திட்டம் பற்றி இருதரப்பினரும் கலந்துரையாடினர்.100 மில்லியன் பவுன் பெறுமதி மிகு 100 கொள்களன் வைத்திய உபகரணங்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்க முடியும் என கொஸ்மோஸ் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.ஒரு கொள்களனை

 தருவிப்பதற்கு 3000பவுன் மட்டுமே செலவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 
சமூக விவகாரங்களில் இரு அமைப்புக்களும் ஒன்றிணைந்து செயற்படுவது இரு தரப்பினரும் விரிவாகக் கலந்து ரையாடுவதற்கு இணக்கம் காணப்பட்டதாக முஸ்லிம் கவுன்சில் அறிக்கை ஒன்று தெரிவித்தது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.