நுவரெலியாவில் மலர் கண்காட்சி ஆரம்பம் 

நுவரெலியா வசந்த காலத்தையொட்டி வருடம் தோறும் நடைபெறும் மலர் கண்காட்சி நுவரெலியா மாநாகரசபை ஏற்பாட்டில்  விக்டோரியா பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்ட மலர் கண்காட்சி நேற்று (17)  திங்கட்கிழமை  உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நுவரெலியாவில் தற்போது வசந்த காலத்தை முன்னிட்டு நடைபெறும் களியாட்ட நிகழ்வுகளில் கலந்துக்கொள்ளவதற்கு ஏராளமான உள்நாட்டு , வெளிநாட்டு சுற்றுலா பிரயாணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது . இதில் ஒரு கட்டமாக வருடம் தோறும் குறித்த மலர் கண்காட்சி நடைபெறும் . இம்முறை விக்டோரியா பூங்காவில் நவீன மயப்படுத்தப்பட்டு , புதிய அரியவகையான பூக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.

நாளை செவ்வாய்க்கிழமை வரை நடைபெறவுள்ள இந்த மலர் கண்காட்சியில் சுமார் 150 இற்கும் மேற்பட்ட பங்குபற்றுனர்கள் இணைந்திருந்தனர்.

அரச மற்றும் தனியார் பிரிவுகளிலிருந்து பல போட்டியாளர்களும் கலந்து சிறப்பித்துள்ளனர்.இம்மலர் கண்காட்சிப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெறுவோருக்கு பணப்பரிசில்களையும் சான்றிதழ்களையும் வழங்க ஏற்பாடு செய்யப்படுள்ளது.

நுவரெலியா மாநகர சபையின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த மலர் கண்காட்சியில் பிரதம அதிதியாக நுவாரெலியா மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ திஸாநாயக்க , நுவரெலியா மாநகரசபை விசேட ஆணையாளர் திருமதி சுஜீவ போதிமான , முன்னாள்  மாநகரசபை முதல்வர் மகிஹிந்த தொடபேகம மற்றும் நுவரெலியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் மாநகரபை உறுப்பினர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

வி.தீபன்ராஜ்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.