இறந்து  மிதக்கும் மீன்கள் - "சமைத்து சாப்பிட வேண்டாம்"
துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதி

கொத்மலை ஓயாவின் பிரதான கிளை ஆறான ஆக்ரா ஓயாவில்
எல்ஜின் தொடக்கம் திஸ்பனை வரையான பகுதியில் கடந்தோடும் ஆற்றில் உயிரிழந்த நிலையில் அதிகளவிலான மீன்கள் கரையொதுங்கியுள்ளன.

இதனையடுத்து, மீன்கள் உயிரிழந்துள்ளதுடன்,ஆற்று நீரை பாவிக்கும் பிரதேச மக்களும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.

நீர் துர்நாற்றம் வீசுவதாகவும் பாவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் லிந்துலை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிக்கு முறைப்பாடு செய்து பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

இதேவேளை, இறந்து மிதக்கும் மீன்களை பிடித்துச் சென்று சமைத்து சாப்பிட வேண்டாம் என்றும், முடியுமானால் ஆற்றில் இருந்து அகற்றி புதைத்துவிட வேண்டும் என்றும் சுகாதார தரப்பினர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

வி.தீபன்ராஜ்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.