எடை அடிப்படையில் முட்டை விற்பனை – நடைமுறைக்கு சாத்தியப்படாது !
முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலை மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை முட்டைகளின் எடைக்கு ஏற்ப விலை வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, ஒரு கிலோகிராம் வெள்ளை முட்டையின் அதிகபட்ச சில்லறை விலையாக 880 ரூபா அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ பழுப்பு முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை 920 ரூபாவாகும்.
இந்த புதிய விலையை நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவித்துள்ளது. இது இன்று முதல் அமலுக்கு வருகிறது. அதற்கான அரசிதழும் வெளியிடப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் விற்பனை செய்யாத வியாபாரிக்குளுக்கு கடும் தண்டனை வழங்கப்படும் என நுகர்வோர் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது
என்ற்லும்
எடை அடிப்படையில் முட்டை விற்பனை செய்வது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் நடைமுறைக்கு சாத்தியப்படாது என முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த வர்த்தமானி அறிவிப்புகள் வெளியிடப்படும் வரை தாம் அறிந்திருக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக