இலங்கை முட்டைகளை விட இந்திய முட்டைகள் தரமானவை
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டையில் எவ்வித பிரச்சினையும் இல்லை என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த நாட்டு முட்டைகளுடன் ஒப்பிடும் போது, இந்திய முட்டைகள் அதிக தூய்மை மற்றும் தரம் வாய்ந்தவை என்று அதன் தலைவர் என்.கே.ஜெயவர்தன கூறினார்.
இந்திய முட்டைகள் தொடர்பில் சிலர் தெரிவித்த கருத்துக்களுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு திரவ முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு தேவையான ஏற்பாடுகள் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டாலும், பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையை இந்த நேரத்தில் குறைக்க முடியுமா என்பது குறித்து மேலும் ஆராய வேண்டும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக