சீனா தொடர்பில் வெளியான கூட்டறிக்கை!

சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் பாலித கொஹேன உள்ளிட்ட 20 நாடுகளின் தூதுவர்களால் சீனா தொடர்பில் கூட்டறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

சீனாவின் யுனான் மாகாணத்திற்கு விஜயம் செய்த பின்னர் தூதுவர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

அதற்கேற்ப யுனானின் தனித்துவம் வாய்ந்த தொழில் வளர்ச்சி, மக்களின் வாழ்க்கை மேம்பாடு, கல்வி வாய்ப்புகள் விரிவடைந்து வருவதைக் காண முடிந்தது என்று குறிப்பிட்டுள்ளனர்.
யுனான் மாகாணத்தில் வறுமையைப் போக்க சீன அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளையும் அவர்கள் பாராட்டினர். அபிவிருத்திச் செயற்பாடுகளில் சீனா யாரையும் பின்தள்ளவில்லை எனவும், அபிவிருத்திச் செயற்பாடுகளில் பங்களிப்பதன் மூலம் அனைத்து மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்தியுள்ளதாகவும் தூதுவர் தெரிவித்தார்.

உலக வறுமையை ஒழிக்க சீனாவும் நடவடிக்கை எடுத்துள்ளது என்பதற்கு இது ஆதாரம் அளிக்கிறது என்றும் அவர்கள் மேலும் கூறுகின்றனர்.
இலங்கை, நமீபியா, மொசாம்பிக், தாய்லாந்து மற்றும் டொபாகோ உள்ளிட்ட 20 நாடுகளின் தூதுவர்களால் இந்த கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.