அரசியல் அழுத்தங்கள் இலங்கை கிரிக்கெட்டில் உள்ளதால் உறுப்புரிமைக்கு இழக்கும் அபாயம் : ICC எச்சரிக்க!

TestingRikas
By -
0
அரசியல் அழுத்தங்கள் இலங்கை கிரிக்கெட்டில் உள்ளதால்  உறுப்புரிமைக்கு இழக்கும் அபாயம் : ICC எச்சரிக்க!

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு அரசியல் அழுத்தங்கள் இருப்பதாக கூறப்படுவதால், எதிர்வரும் நாட்களில் சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) இலங்கை கிரிக்கெட்டின் உறுப்புரிமையை இடைநிறுத்த வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தின் மீதான அரசியல் அழுத்தங்கள் குறித்து சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்று (26) காலை வினவியதாகவும், அங்கத்துவத்தை தடை செய்ய வேண்டாம் என கிரிக்கெட் நிர்வாகம் ஐ.சி.சி.யிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

உலகக்கிண்ண தகுதிச் சுற்றுக்கு முன்னதாக இலங்கையின் ஐ.சி.சி உறுப்புரிமை இடைநிறுத்தப்படும் என்றும், அப்படி நடந்தால் இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக்கிண்ண போட்டியில் இலங்கை அணி பங்கேற்பதற்கான வாய்ப்பு கைநழுவிப் போகும் என்பது குறப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)