இன்று நள்ளிரவு முதல் QR குறியீட்டின் கான் எரிபொருள் கோட்டா அதிகரிப்பு

எதிர்வரும் புத்தாண்டு காலத்தை முன்னிட்டு வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே, திட்டமிட்டபடி, பண்டிகைக் காலத்திற்குத் தேவைக்கான எரிபொருளை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கையிருப்பில் வைத்துள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

இதன்படி, முச்சக்கர வண்டிகளுக்கான பெற்றோல் 8 லீற்றராகவும் மோட்டார் சைக்கிள்களுக்கு 7 லீற்றராகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பஸ்களுக்கு முன்னர் 40 லீற்றர் எரிபொருள் வழங்கப்பட்டு வந்த நிலையில், அது தற்போது 60 லீற்றராக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கார்களுக்கு வழங்கப்படும் எரிபொருளின் அளவு 30 லிட்டராகவும், லொறிகளுக்கு வழங்கப்படும் எரிபொருளின் அளவை 75 லீற்றராகவும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.