ரயில் மற்றும் பேருந்து டிக்கெட்டுக்கு பதிலாக QR குறியீடு அறிமுகம்

ரயில் மற்றும் பஸ் பயணிகளுக்கு டிக்கெட்டுக்கு பதிலாக QR குறியீடு அறிமுகப்படுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த வேலைத்திட்டம் இவ்வருடம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

சில பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள், டிப்போக்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட பயணிகள் கட்டணத்தை வழங்குவதில்லை என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இது புகையிரதங்களிலும் இடம்பெறுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் காரணமாக, புதிய தொழில்நுட்பத்தில் QR குறியீடு மூலம் தாமே சுயமாக டிக்கெட் பெறும் முறை உருவாக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.