மூன்றாவது வகுப்பில் பயணிக்க டிக்கட் எடுத்து இரண்டாவது வகுப்பில் பயணித்தவர்களிடம் 1 இலட்சத்து 14 ஆயிரம் தண்டப்பணம் அறவீடு.
 பொல்ஹாவலயில் இருந்து ரத்மலானை வரை பயணித்த “பௌஸி” அலுவலக ரயில், மூன்றாவது

வகுப்பில் பயணிப்பதற்கு நுழைவுச்சீட்டுகளை பெற்றுக்கொண்டு, இரண்டாவது வகுப்பில் பயணித்த 45 பேரை, கைது செய்துள்ளதாக ரயில் பாதுகாப்பு இராணுவம் தெரிவித்துள்ளது.


இன்று (15) முன்னெடுக்கப்பட்ட திடீர் பரிசோதனையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 1 இலட்சத்து 14 ஆயிரத்து 160 ரூபாய் தண்டப்பணமாக பெறப்படவுள்ளது என்றும் அப்பிரிவினர் அறிவித்தனர்.மூன்றாவது வகுப்பு நிரம்பியிருந்தமையால் அவர்களால் அமர்ந்திருந்து பயணிக்க முடியாது. எனினும், இரண்டாம் வகுப்பில் அவர்கள் அமர்ந்திருந்து பயணித்துள்ளனர் என்பது கண்டறியப்பட்டது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.