மனைவிக்காக 1.50 கோடி ரூபாயில் கோயில் கட்டிய கணவன்!
2016 ஆம் ஆண்டு இறந்த தனது மனைவியின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்ற, சதர்பூர் பகுதியில் பிரம்மாண்டமான ‛ராதாகிருஷ்ணா' கோயில் ஒன்றை கட்டியுள்ளார்.
இந்த கோயிலில் மார்பிள் கற்களில் கலையை செதுக்கி, அழகு செய்யப்பட்டுள்ளதுடன், இவ் ஆலயத்திற்கான பணிகளில் கடந்த 3 ஆண்டுகளாக ராஜஸ்தானை சேர்ந்த முஸ்லீம் கலைஞர்கள் தங்களது பங்களிப்பை வழங்கியுள்ளனர்.
வரும் 29 ஆம் திகதி முதல் பக்தர்களின் வழிபாட்டிற்காக கோயில் திறக்கப்படும் என தனது மனைவிக்காக இக் கோயிளை கட்டும் ஓய்வு பெற்ற ஆசிரியரான பிபி சன்சோரியா தெரிவித்துள்ளார்.