உள்ளாடைக்குள் ஹெரோயினுடன் 16 வயது சிறுமி கைது

யாழ்ப்பாணம், பருத்தித்துறையில் 5.5 கிராம் ஹெரோயினுடன் 16 வயது சிறுமி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ். முகாமில் கடமையாற்றிய பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்று (22) இரவு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சிறுமி கைது செய்யப்பட்டார்.
பருத்தித்துறை, காந்தியூர் பகுதியில் உள்ள வீடொன்று சோதனையிடப்பட்டது.
விசேட அதிரடிப்படையின் பெண் உத்தியோகத்தர்கள், வீட்டிலிருந்த 16 வயதுடைய சிறுமியை சோதனையிட்ட போது, அவர் உள்ளாடைக்குள் சூட்சுமமாக ஹெரோயின் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.
சிறுமி பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சிறுமி பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.