உலகம் முழுவதும் 20 இலட்சம் பேர் பலி!
 
உலகம் முழுவதும் தீவிர வானிலையினால் கடந்த 50 ஆண்டுகளில் 20 இலட்சம் பேர் பலியாகியுள்ளனர் என அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.
சுவிட்சர்லாந்து – ஜெனீவா நகரில் இடம்பெற்ற உலக வானிலை மாநாட்டில் உலக வானிலை அமைப்பு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் அந்த அமைப்பின் பொது செயலாளர் பெத்தேரி தாலஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த 50 ஆண்டுகளில் ஏற்பட்ட பல்வேறு பேரிடர்களால், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30 சதவீதம் பொருளாதார பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இது வளர்ந்து வரும் சிறிய தீவு நாடுகளில் 5 பேரிடர்களில் ஒன்றாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதத்திற்கும் கூடுதலான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
இதில், உலகம் முழுவதும் தீவிர வானிலையால் கடந்த 50 ஆண்டுகளில் 20 இலட்சம் பேர் வரை பலியாகியுள்ளனர். அதிகளவாக ஆசிய நாடுகள் பாதிப்பை கண்டுள்ளன. இதன்படி 10 இலட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆப்பிரிக்காவில், 7 லட்சத்து 33 ஆயிரத்து 585 பேர் பருவநிலை பேரிடரால் உயிரிழந்துள்ளனர். இதில் 95 சதவீதம் வறட்சி நிலையால் ஏற்பட்டவை ஆகும் என அறிக்கை தெரிவிக்கின்றது.
உலகம் முழுவதும் கடந்த 1970 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை வானிலை, பருவநிலை மற்றும் நீர் தொடர்புடைய தீங்குகளால் 12 ஆயிரம் பேரிடர்கள் ஏற்பட்டுள்ளன. இதனால், வளர்ந்து வரும் நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.
பருவநிலை அதிர்ச்சிகள் மற்றும் தீவிர வானிலையால், 10ல் 9 பேரும், 60 சதவீத பொருளாதார பாதிப்புகளையும் அந்த நாடுகள் சந்தித்துள்ளன.
50 ஆண்டுகால தீவிர வானிலை நிகழ்வுகளால், மனிதர்களால் உண்டாக்கப்பட்ட உலகளாவிய வெப்பமயமாதல் ஆகியவற்றால், 20 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர். இதுபோக, இந்திய மதிப்பில் ரூ.356 இலட்சம் கோடி பொருளாதார இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.