இன்று (மே 22ம் திகதி) இலங்கையின் 51வது குடியரசு தினமாகும்

இன்று (மே 22ம் திகதி) இலங்கையின் 51வது குடியரசு தினமாகும்.

கடந்த 1972ம் ஆண்டு அப்போதைய ஆட்சியில் இருந்த ஶ்ரீமாவோ அம்மையார் தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கம், இலங்கையை டொமினியன் அந்தஸ்தில் இருந்து நீக்கி சுதந்திர குடியரசாக பிரகடனப்படுத்தியது

1972ம் ஆண்டு மே மாதம் 22ம்திகதி அதுவரை இலங்கையில் நடைமுறையில் இருந்த சோல்பரி யாப்பு நீக்கப்பட்டு, குடியரசு யாப்பு அறிமுகப்படுத்தப்பட்டது

இலங்கையில் பௌத்த மதத்துக்கு முன்னுரிமை அளித்தல், ஐக்கிய இலங்கை ஆகிய விடயங்கள் இந்த யாப்பின் மூலமாகவே முன்வைக்கப்பட்டிருந்தன

ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து முழுமையாக விடுபட்டு குடியரசாக மாற்றம் பெற்றதை முன்னிட்டு 1972ம் ஆண்டின் மே மாதம் 22ம் திகதி நாடு முழுவதும் பட்டாசு வெடித்து, பாற்சோறு பொங்கி பொதுமக்கள் கோலாகலமான கொண்டாட்டங்களை முன்னெடுத்திருந்தார்கள்.

அந்த வகையில் இலங்கை குடியரசாக பிரகடனப்படுத்தப்பட்டு இன்றுடன் 51 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது

கருத்துகள்