சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 25 பேர் கைது

திருகோணமலையில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீனவர்களின் 5 டிங்கி படகுகளும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

18 முதல் 57 வயதுக்கு இடைப்பட்ட குறித்த மீனவர்கள் துறைமுகம், கிண்ணியா, மூதூர் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களாவர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை மாவட்ட பிராந்திய கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.