விதிகளை மீறி விற்கப்படவிருந்த 30 மில்லியன் ரூபா பெறுமதியான அழகுசாதனப் பொருட்கள்
இறக்குமதியாளர் மற்றும் உற்பத்தி நிறுவனத்தின் பெயர் குறிப்பிடப்படாமல் வைக்கப்பட்டிருந்த அழகுசாதனப் பொருட்கள் உள்ளிட்ட பல உற்பத்திகளை நுகர்வோர் விவகார அதிகார சபையினர் கைப்பற்றியுள்ளனர்.
கொழும்பு - புறக்கோட்டை கதிரேசன் வீதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த உற்பத்தி பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட அழகுசாதனப் பொருட்களின் பெறுமதி சுமார் 30 மில்லியன் ரூபா என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட குறித்த உற்பத்திகள், வௌிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதாக கூறி சந்தையில் விற்பனை செய்வதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததாக நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட பொருட்களை இரசாயன பகுப்பாய்விற்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக