33 ஆயிரம் லீட்டருடன் சென்ற கொள்கலனுக்கு நேர்ந்த நிலை - நிரப்பிச் செல்லும் மக்கள்
எரிபொருள் கொள்கலன் ஊர்தி ஒன்று விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இச் சம்பவம் ஹப்புத்தளை பத்கொட பகுதியில் இன்று -06- அதிகாலை 4மணிக்கு இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கொழும்பில் இருந்து 33 ஆயிரம் லீட்டர் டீசல் கொள்கலனுடன் ஹப்புத்தளை நோக்கி பயணித்து கொண்டிருந்த வேலை அவ் ஊர்தி வீதியை விட்டு விலகிச் சென்று இச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் காயமடைந்த அவ் ஊர்தியின் உதவியாளர் பங்கட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் தியத்தலாவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு இவ் விபத்தினால் வீடொண்டிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் ஆனால் குறித்த வீட்டில் இருந்தவர்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் குறித்த டீசல் கொள்கலனில் இருந்து கசிவு ஏற்படுவதாகவும் அதில் இருந்து அப் பிரதேச மக்கள் அதனை நிரப்பி செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.