நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கே மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நிலம் தாழிறங்கல், கற்பாறை சரிதல், மண்மேடு சரிதல், நிலத்தில் வெடிப்பு ஏற்படுதல் உள்ளிட்டவை தொடர்பில் பொதுமக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவுறுத்தியுள்ளது.கருத்துரையிடுக

Blogger இயக்குவது.