"உங்களுக்கு வீடு - நாட்டிற்கு நாளை" வீடமைப்பு உதவித் திட்டத்தின் வீட்டு நிர்மாணப் பணிகள் தற்போது 50 வீதம் நிறைவு

⏩ "உங்களுக்கு வீடு - நாட்டுக்கு நாளை" வீடமைப்பு உதவித் திட்டத்தின் முடிக்கப்படாத வீடுகளின் பணிகளை மீள ஆரம்பிக்க திறைசேரியிலிருந்து 751 மில்லியன் ரூபா...

⏩ 2265 வீடுகளின் நிர்மாணப் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும்...

⏩ "உங்களுக்கு வீடு - நாட்டிற்கு நாளை" வீடமைப்பு உதவித் திட்டத்தின் வீட்டு  நிர்மாணப் பணிகள் தற்போது 50 வீதம் நிறைவடைந்துள்ளது...

உங்களுக்கு வீடு - நாட்டிற்கு நாளை வீடமைப்பு உதவித் திட்டத்தின் முடிக்கப்படாத வீடுகளின் பணிகளை மீண்டும் தொடங்குவதற்கு திறைசேரியினால். தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு 751 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது.

போதிய நிதி ஒதுக்கீடு இல்லாததால் இந்த வீட்டுத் திட்டம் கிட்டத்தட்ட நான்கு மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டது.  நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அரசாங்கத்திடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய, திறைசேரியும் இந்த நிதியை வழங்கியுள்ளது.

உங்களுக்கு  வீடு - நாட்டிற்கு நாளை  வீடமைப்பு உதவித் திட்டத்தின் கீழ் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது நிறுத்தப்பட்டுள்ள 2,265 வீடுகளின் நிர்மாணப் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அந்த 2265 வீடுகளின் கட்டுமானப் பணிகள் தற்போது பல்வேறு கட்டங்களில் உள்ளன. இதன்படி, “உங்களுக்கு வீடு – நாட்டிற்கு நாளை” வீடமைப்புத் திட்டத்தின் கீழ் பணிகளை ஆரம்பித்து பூர்த்தி செய்ய முடியாத அனைத்து வீடுகளின் நிர்மாணப் பணிகளையும் மீண்டும் ஆரம்பிக்குமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
"உங்களுக்கு வீடு - நாட்டிற்கு  நாளை" வீடமைப்பு உதவித் திட்டத்தின் 50 வீதமான வீடுகளின் நிர்மாணப் பணிகள் நிறைவடைந்துள்ளன என்று தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

2021 ஆம் ஆண்டில், 12,231 வீடுகள் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது, அதில் 6,039 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. அத்துடன் 2022ஆம் ஆண்டு 1465 வீடுகளுக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் 25 வீடுகளே பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் பரவல் மற்றும் நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த வருடங்களில் "உங்களுக்கு வீடு - நாட்டிற்கு நாளை" வீடமைப்புத் திட்டத்தின் கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. .

ஆனால் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இத்திட்டத்தின் நிர்மாணப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.

உங்களுக்கு  வீடு - நாட்டிற்கு நாளை வீடமைப்புத் திட்டம்  முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் எண்ணக்கருவின்  அடிப்படையில் 2020 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. சொந்த வீடு இல்லாத குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கானது. இந்த வீடமைப்புத் திட்டத்தின் கீழ், இலங்கையிலுள்ள அனைத்து 14022 கிராம சேவைப் பிரிவுகளையும் உள்ளடக்கும் வகையில் ஒவ்வொரு கிராம சேவைப் பிரிவுக்கும்ஒரு வீடாக 14022 வீடுகளை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டது.


முனீரா 

கருத்துகள்