சற்றுமுன் வௌியான விசேட வர்த்தமானி!
தாவரவியல் பூங்காவுக்கான நுழைவுக் கட்டணத்தை ஜூலை 01 ஆம் திகதி முதல் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, உள்ளூர் பெரியவர்களுக்கு 200 ரூபாவும், சிறுவர்களுக்கான நுழைவுக் கட்டணமாக 30 ரூபாவும், வசூலிக்கப்படுகிறது.
முன்பு பெரியவர்களுக்கு 100 ரூபாவும், சிறுவர்களுக்கு 20 ரூபாவும் கட்டணம் விதிக்கப்பட்டது.
தாவரவியல் பூங்காவிற்கு வெளிநாட்டு பெரியவர்களுக்கான நுழைவுக் கட்டணம் 3,000 ரூபாவாகவும் வெளிநாட்டு சிறுவர்களுக்கு 1,500 ரூபாவாகவும் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக