இன்றைய காலநிலை குறித்து பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்றைய தினம் (04.05.2023) நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கிழக்கு, ஊவா, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும், ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் சுமார் 50 மில்லிமீற்றர் வரையான மழை பெய்யக்கூடும்.

மேற்கு மற்றும் தெற்கு கடலோர பகுதிகளில் அவ்வப்போது மணிக்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் அந்த அறிவிப்பில் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

அப்பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்வதுடன், மின்னல் தாக்கங்களும் இருக்கக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

இடியுடன் கூடிய மழையின்போது, தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.