களுத்துறை ஹோட்டல் ஒன்றின் மேல் மாடியில் இருந்து விழுந்து 16 வயது பாடசாலை மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நான்கு சந்தேகநபர்களும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று (15) களுத்துறை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

சந்தேக நபர்களில் உயிரிழந்த மாணவியை விடுதிக்கு அழைத்துச் சென்ற இளம் தம்பதியினர், ஹோட்டல் உரிமையாளரின் மனைவி மற்றும் பிரதான சந்தேக நபரின் சாரதியாக இருந்தவர் ஆகியோர் அடங்குவர்.

சந்தேகநபர்கள் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட போது உயிரிழந்த சிறுமியின் தாயார் உட்பட சுமார் 100 பேர் நீதிமன்றத்திற்கு முன்பாக வரிசையில் நின்று மௌனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.