இன்றும் நாட்டின் முக்கிய நகரங்களில் மழை

TestingRikas
By -
0
இன்றும் நாட்டின் முக்கிய நகரங்களில் மழை 

கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் முல்லைத்தீவு மற்றும் பொலநறுவை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் ஆங்காங்கே மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


மேல், சப்ரகமுவ, மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
   

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)