சீன பிரஜைக்கு விதிக்கப்பட்டுள்ள தடை

 இரு கடவுச்சீட்டுகளுடன் நாட்டிற்கு வந்த சீனப் பிரஜை மீண்டும் நாட்டிற்குள் பிரவேசிப்பது முற்றாக இடைநிறுத்தப்படுவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

சந்தேகநபரை நாடு கடத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் டிரான் அலஸ் கூறியுள்ளார்.

குறித்த நடவடிக்கைகளை வெகு விரைவில் நிறைவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

போதைப்பொருள் கடத்தல் சம்பவம் தொடர்பில் குறித்த சீன பிரஜையை கைது செய்ய அந்நாட்டில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

கடந்த 18 ஆம் திகதி துபாயில் இருந்து நாட்டிற்கு வந்த இந்த சீன பிரஜை கினி இராச்சிய கடவுச்சீட்டுடன் நாட்டிற்குள் பிரவேசிக்க முற்பட்ட போது அது போலியானது என குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் தீர்மானித்து கைது செய்தனர்.கருத்துரையிடுக

Blogger இயக்குவது.