ஹிங்குராங்கொடையில் சர்வதேச சிவில் விமான நிலையம்?
ஹிங்குராங்கொடை விமான நிலையத்தை சர்வதேச சிவில் விமான நிலையமாக மேம்படுத்த திட்டம்

 ஹிங்குராங்கொடை விமான நிலையத்தை சர்வதேச சிவில் விமான நிலையமாக அபவிருத்தி செய்வதற்கு துறைமுகங்கள் கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். 

இதனுடாக பொலன்னறுவை, சிகிரியா, அனுராதபுரம், தம்புள்ளை உள்ளிட்ட இடங்களை பார்வையிட வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை கவர முடியும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

அத்துடன், சுற்றுலாப் பயணிகள் ஈர்க்கப்படுவதனூடாக பாரிய அளவிலான அந்நிய செலாவணியை ஈட்ட முடியும் எனவும் அவர் கூறினார். 

ஹிங்குராங்கொடை விமான நிலையத்தில் குறைந்தபட்சம் A330 ரக விமானத்தை தரையிறக்குவதற்கு மற்றும் பறக்கச்செய்வதற்கு தேவையான சில பிரதான அபிவிருத்திப் பணிகள் விரைவாக செய்யப்பட வேண்டும் என விமான சேவைகள் அமைச்சர் கூறினார்.

தற்போது 2287 மீட்டர் நீளமாக காணப்படும் விமான ஓடுபாதையை 2800 மீட்டர் வரை நீடிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.