டிவிட்டரில் வொய்ஸ் மற்றும் வீடியோ கோல் வசதி
டிவிட்டரில் விரைவில் வொய்ஸ் மற்றும் வீடியோ கோல் வசதியை அறிமுகம் செய்யவுள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் உரிமையாளரான எலான் மஸ்க் 4,400 கோடி டாலரில் (சுமார் ரூ.12.64 லட்சம் கோடி) ட்விட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தியதையடுத்து, கடந்தாண்டு அக்டோபர் மாதம் அதன் தலைமைச் செயல் அதிகாரியாகவும் பொறுப்பேற்றார்.
இதைத் தொடர்ந்து பணியாளர்கள் நீக்கம், பதிவிடும் முறையில் நவீனமயமாக்கம், டிவிட்டர் ப்ளூ டிக்கிற்கு கட்டணம் உள்ளிட்ட அவரது அதிரடி நடவடிக்கைகள் சர்ச்சைக்குள்ளானது.
இந்நிலையில், டிவிட்டரில் விரைவில் வொய்ஸ் மற்றும் வீடியோ கால் வசதியை அறிமுகம்  செய்யவுள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
மேலும், இதன்மூலம் உலகம் முழுவதும் யாரிடம் வேண்டுமானாலும் போன் நம்பர் கொடுக்காமல் உரையாடலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.