செல்லக் கதிர்காமத்தில் நிலநடுக்கம்!
 
செல்லக்கதிர்காமம் என அழைக்கப்படும்  கதிர்காமம் – லுனுகம்வெஹர பகுதியில் சிறியளவிலான நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுங்க பணியகம் தெரிவித்துள்ளது.
குறித்த நிலஅதிர்வு ரிக்டர் அளவுகோலில் 2.5 ஆக பதிவாகியுள்ளதாக அந்த பணியகம் தெரிவித்துள்ளது.
நேற்றிரவு 10.15 மணியளவில் இந்த நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தை அப்பகுதி மக்கள் உணர்ந்துள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
இந்த நில அதிர்வினால் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.