பேராதனை பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தை கலைக்க பொலிஸார் நடவடிக்கை

 பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் போராட்டத்தின் போது பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். 

பேராதனை பல்கலைக்கழக மாணவர் சங்க தலைமையகத்திற்கு முன்பாக இன்று (23) பிற்பகல்  எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

அங்கிருந்து மாணவர்கள் கண்டி நகரம் வரை முன்னெடுக்க தீர்மானித்திருந்த பேரணியை கலைக்க பேராதனை வைத்தியசாலை அருகில் பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர். இதன்போது, பேரணியைக் கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டனர். 

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் மாணவர்கள் மீதான அடக்குமுறையை நிறுத்துமாறு கோரியே இந்த எதிர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டது. 

 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.