இறக்குமதி பழங்களில் ஈயம்..! வௌியான அதிர்ச்சித் தகவல்!

TestingRikas
By -
0

  
இறக்குமதி பழங்களில் ஈயம்..! வௌியான அதிர்ச்சித் தகவல்!
 

எதிர்வரும் 1 ஆம்  திகதி முதல் இறக்குமதி செய்யப்படும் பழங்களில் காணப்படும் உலோக பதார்த்தங்களின் அளவுகளை பரிசோதிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இறக்குமதி செய்யப்படும் சில பழங்களில் ஈயம் அதிகளவில் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சினால் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
2021 முதல் 2022 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் சுகாதார அமைச்சின் உணவு பாதுகாப்பு பிரிவு மேற்கொண்ட ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இந்த நிலைமை பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
இதனால், ஜூன் முதலாம் திகதி முதல் இறக்குமதி செய்யப்படும் பழங்களில் காணப்படும் உலோக பதார்த்தங்களின் அளவுகளை பரிசோதிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)