கோழி, மீன், முட்டை, தேங்காய் – விலைகள் அதிகரிப்பு!
 


சில முக்கிய அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளதாக உணவக உரிமையாளர் சங்கத் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
அதன்படி, கோழி இறைச்சி, மீன் மற்றும் தேங்காய் ஆகியவற்றின் விலைகளே இவ்வாறு அதிகரித்துள்ளதாக கூறியுள்ளார்.
நேற்று (29) கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இவ்விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, 1,200 ரூபாவாக இருந்த ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை 1,500 ரூபா முதல் 1,600 ரூபா வரையான விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றது.
அத்துடன், சந்தையில் மீனின் விலையும் மீண்டும் அதிகரித்துள்ளது.
பேலியகொடை மீன் சந்தையில், கெலவல்லா கிலோ ஒன்று 1,900 ரூபாவிற்கும், பலயா மீன் கிலோவொன்று 1,400 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த விலை உயர்விற்கு இணையாக சாதாரண சந்தைகளிலும் மீனின் விலை உயர்ந்துள்ளது.
அத்துடன், கோழி இறைச்சி, மீன், முட்டை மற்றும் தேங்காய் ஆகியவற்றின் விலைகள் மீண்டும் உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.