ஆசிரியரை தாக்கிய மாணவர்களுக்கு பிணை!
 


பாடசாலையொன்றின் ஒழுக்காற்று ஆசிரியரை தாக்கிய சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மாணவர்கள் மற்றும் கைது செய்யப்பட்ட சந்தேகத்திற்குரிய மாணவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

புத்தளத்திலுள்ள முஸ்லிம் பாடசாலை ஒன்றில் கடந்த 23ஆம் திகதி இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் 4 பாடசாலை மாணவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டதுடன், 17 மாணவர்கள் கடந்த 25ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.

சந்தேகத்திற்குரிய மாணவர்கள் அனைவரும் நேற்று (26) புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிணை நிபந்தனைகளில் விடுவிக்கப்பட்டனர்.

இதன்போது, ஒருவருக்கு 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணையும் மற்றும் சாதாரண தர பரீட்சை முடிந்தவுடன் அடுத்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் புத்தளம் பொலிஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டது.

மேலும், எந்த காரணத்திற்காகவோ முறைப்பாட்டாளருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டால், பிணை ரத்து செய்யப்பட்டு, வழக்கு விசாரணை முடியும் வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு ஜூன் 22ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.