சினோபெக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்தானது!

உலகின் 5 பெரிய பெற்றோலிய நிறுவனங்களில் ஒன்றான சீனாவின் சினோபெக் நிறுவனத்துடன் இலங்கையில் பெற்றோலியப் பொருட்களை விற்பனை மற்றும் விநியோகம் செய்வதற்கான ஒப்பந்தம் இன்று (22) கைச்சாத்திடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இலங்கையில் பெற்றோலியப் பொருட்களை இறக்குமதி செய்தல், சேமித்தல் மற்றும் விற்பனை செய்வது தொடர்பாக Sinopec Fuel Oil Lanka (Pvt) Ltd மற்றும் சீனா மற்றும் சிங்கப்பூரில் அமைந்துள்ள அதன் தாய் நிறுவனத்துடன் நீண்ட கால ஒப்பந்தம் எட்டப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று (22) முற்பகல் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் நியமிக்கப்பட்ட விசேட குழு சீன சினோபெக் நிறுவனத்துடன் நடத்திய கலந்துரையாடலின் பின்னர் வழங்கப்பட்ட பரிந்துரைகளின் பிரகாரம் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.