பலஸ்தீனியர்களுக்கு எதிரான பயங்கரவாதத்தை நிறுத்து - சஜித் கோரிக்கை
ஏறக்குறைய 75 வருடங்களாக பலஸ்தீன மக்களின் அரசியல், கலாசாரம் உட்பட அனைத்து சுதந்திர உரிமைகளையும் இழந்துள்ளதாகவும், அனைத்தையும் வென்றெடுப்பதற்காகவே போராடி வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.பல்லாயிரக்கணக்கான பலஸ்தீனர்கள் பாதிக்கப்படும் போது, சர்வதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மனிதர்கள் என்ற வகையில், நாம் அனைவரும் பொறுப்பு என்று கூறிய எதிர்க்கட்சித் தலைவர் பாலஸ்தீனம் ஒரு சட்டபூர்வமான தேசிய அரசு என்றும் கூறினார்.
பலஸ்தீன தூதரகத்தின் ஏற்பாட்டில் கொழும்பில் நடைபெற்ற நிகழ்விலேயே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு கருத்து வெளியிட்டார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.