இரண்டு வாரத்திற்கு மூடப்படும் மதுபான சாலைகள்!
 

கதிர்காமம் பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள அனைத்து மதுபானசாலைகளும் 16 நாட்களுக்கு மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுணு கதிர்காமம் ஆலய எசல திருவிழாவை முன்னிட்டு அப்பகுதியில் உள்ள மதுபானக் கடைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஜூன் 19ஆம் திகதி முதல் ஜூலை 4ஆம் திகதி வரை மதுக்கடைகள் மூடப்படவுள்ளன.

இந்த காலப்பகுதியில், எசல திருவிழா காலத்தில் திருவிழா நடைபெறும் இடத்தை மதுவற்ற பகுதியாக மாற்றுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு ஊவா மாகாண கலால் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுணு கதிர்காமம் ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு வெளியில் இருந்து மதுபானம் மற்றும் போதைப் பொருட்களை கொண்டு செல்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கதிர்காம பகுதியில் இடம்பெறும் போதைப்பொருள் குற்றச் செயல்கள், மதுபான குற்றங்கள் மற்றும் புகையிலை குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகளுக்காக 1913 என்ற விசேட தொலைபேசி இலக்கம் 24 மணித்தியாலங்களும் பொதுமக்களுக்காக திறந்திருக்கும் என கலால் திணைக்களத்தின் மேலதிக கலால் ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.