பன்சில்கொட சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்தல்

மினுவாங்கொடை பன்சில்கொட விளையாட்டு மைதானமாக உபயோகிக்கப்பட்டு வந்த காணியை என்னால் சுகவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நேற்று (25) அவ்விடத்தில் நடந்த ஒரு சம்பவத்தை அடிப்படையாக கொண்டு சில ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாக வெளியிடப்பட்ட விடயங்கள் தொடர்பானது.

இந்த காணி எனக்கு தனிப்பட்ட உரித்தானது அல்ல. இக்காணி ரெஜீ ரணதுங்க புலமை பரிசில் அறக்கட்டளை நிதியத்திற்கு சொந்தமானதாகும். ரெஜீ ரணதுங்க புலமை பரிசில் அறக்கட்டளை நிதியம் பாராளுமன்ற ஒழுங்குவிதிகளின் கீழ் உள்ளடங்கும்.  அது அப்பகுதியின் சமூக நலன்புரி நடவடிக்கைகளுக்காக அமைக்கப்பட்டதாகும். 

குறிப்பிட்ட காணி ஏற்கனவே ரெஜீ ரணதுங்க புலமை பரிசில் அறக்கட்டளை நிதியத்தின் மூலம் அரச மற்றும் கொரிய நிதியுதவியின் கீழ் கைத்தொழிற்பயிற்சி நிலையம் ஒன்று நடாத்தப்பட்டு வந்துள்ளதுடன்  அது கைத்தொழில் பயிற்சி அதிகாரசபையின் கீழ் செயற்பட்டு வந்தது.  

இந்த கைத்தொழிற்பயிற்சி நிலையம் செயற்பட்டு வந்த காலக்கட்டத்தில் அப்பிரதேசத்தில் உள்ள சில நபர்களால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுத்தப்பட்டு வந்தபடியால்  கைத்தொழிற்பயிற்சி மத்தியஸ்தான  நடவடிக்கைகளுக்கு இடைஞ்சலாக இருந்தது. 

அதன் காரணமாக கைத்தொழில் பயிற்சி அதிகாரசபையினால் பன்சில்கொட கைத்தொழில் மத்தியஸ்தானம் மூடப்பட்டது.  அத்துடன் ரெஜீ ரணதுங்க புலமை பரிசில் அறக்கட்டளை நிதியத்தின் மூலம் அரச மற்றும் கொரிய நிதியுதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட கட்டிடமும் கைவிடப்பட்டது. கொரிய நிதிய சபையின் மூலம் இந்த மத்தியஸ்தானத்திற்கு அளிக்கப்பட்ட பயிற்சி உபகரணங்களும் உடுகம்பொல செரத் பரணவித்தான பாடசாலைக்கும் அருகிலுள்ள சில பாடசாலைகளுக்கும் வழங்கப்பட்டது.

இந்த கைத்தொழில் பயிற்சி மத்தியஸ்தானம் மூடப்பட்டதன் பின்னர் அந்த கட்டிடத்தில் பல சமூக விரோத நடவடிக்கைகளுக்காக உபயோகிக்கப்பட்டு வருவதாக பல புகார்கள் கிடைக்கப்பெற்றது.  போதைபொருள் பாவனைக்கும் இந்த இடம் உபயோகிக்கப்பட்டு வருவதாக அப்பிரதேச மக்களின் வாயிலாக அறியக்கிடைத்தது.  அதற்கமைய அத்துடன் ரெஜீ ரணதுங்க புலமை பரிசில் அறக்கட்டளை நிதிய சபை இந்த இடத்தை அபிவிருத்தி செய்ய தீர்மானித்து அதற்கான நடவடிக்கை எடுத்தது. 

இந்த அபிவிருத்தி நடவடிக்கைகளை நிறுத்துமாறு சில பிரதேச வாழ் மக்கள் என்னிடம் முறையிட்டார்கள். ஆதனால் அது தொடர்பாக ஆராய்ந்து பார்க்க சென்ற எனது அலுவலக உறுப்பினர் மற்றும் மற்றுமொரு உறுப்பினருடனும் பிரதேசவாழ் மக்களுக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.  இந்த வாய்த்தர்க்கம் சில பிரதேச வாழ் மக்களின் தலையீடு காரணமாக பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. 
  
ஆதலால் இந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு சில ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாக சில நபர்கள் என்னை அவமானபடுத்த ஆரம்பித்துள்ளனர்.   இது தொடர்பாக எனக்கும் ரெஜீ ரணதுங்க புலமை பரிசில் அறக்கட்டளை நிதிய சபைக்கு ஏற்பட்டுள்ள குற்றச்சாட்டை நான் மறுக்கின்றேன். இது தொடர்பாக சட்டரீதியான நியாயத்தை எதிர்பார்க்கின்றேன்.

பிரசன்ன ரணதுங்க
(நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.