"இலங்கை முஸ்லிம்களின் தேசிய பங்களிப்பு" நூல் அறிமுக விழா.!


பன்னூலாசிரியர் கலாநிதி ரவூப் ஸெய்ன் எழுதிய "இலங்கை முஸ்லிம்களின் தேசிய பங்களிப்பு" எனும் நூலின் அறிமுக விழாவும் விசேட உரையும் இன்று (06) சனிக்கிழமை மாளிகைக்காடு பாவா ரோயலி வரவேற்பு மண்டபத்தில் மட்டக்களப்பு தேசிய கல்வியற் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் அன்ஸார் பழீல் மௌலானா தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவில், அம்பாறை மாவட்ட றாபிதத்துன் நளீமியின் தலைவரும் அம்பாறை, சிரேஷ்ட சுற்றாடல் உத்தியோகத்தருமான அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். இஸ்ஹாக் நளீமி வரவேற்புரையையும் அறிமுக உரையையும் நிகழ்த்தியதோடு, இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை சிரேஷ்ட பேராசிரியர் எம். றமீஸ் அப்துல்லாஹ் நூல் பற்றிய அறிமுகத்தையும் "இலங்கை முஸ்லிம்களின் தேசிய பங்களிப்பு" எனும் தலைப்பில் கலாநிதி ரவூப் ஸெய்ன் விசேட உரையையும் நிகழ்த்தினர்.

இந்நிகழ்வில் உலமாக்கள், அம்பாறை மாவட்ட ஜம்மியதுல் உலமா சபை தலைவர் அஷ்ஷெய்க் மௌலவி எஸ்.எச். ஆதம்பாவா, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் எம்.பி. அப்துல் வாஜித், சம்மாந்துறை பிரதேச நீர்ப்பாசன பொறியியலாளர் எந்திரி எம்.பி.எம். நவாஸ், பல்வேறு வைத்தியசாலைகளின் வைத்திய அதிகாரிகள், கல்விமான்கள், அரசியல் பிரமுகர்கள், துறைசார் பிரமுகர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், சிவில் சமூக அமைப்புக்களின் பிரதானிகள், ஊடகவியலாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

அம்பாறை மாவட்ட றாபிதத்துன் நளீமியின் செயலாளரும் கலாசார  உத்தியோகத்தருமான அஷ்ஷெய்க் ஏ.ஏ.ஏ. அஸீம் நளீமி நன்றியுரை நிகழ்த்துவதோடு, நிகழ்ச்சி தொகுப்பை அஷ்ஷெய்க் றாபி எம். மப்றாஸ் நளீமி செய்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.