விலைகள் குறைக்கப்படும், பணமும் வைப்பிலிடப்படும்இந்த ஆண்டு நிறைவடைவதற்கு முன்னதாக மக்களின் வாழ்க்கைச் செலவை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தகவலை விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர வெளியிட்டுள்ளார். 


பல்வேறு வழிகளில் நிவாரணங்களை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மின்சாரக் கட்டணங்கள் எதிர்வரும் இரண்டு மாதங்களில் குறைக்கப்படும்.எரிபொருள் விலை இரண்டு கட்டணங்களாக குறைக்கப்படும். எரிவாயு விலைகளும் மேலும் குறைவடையும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கு மாதாந்தம் கொடுப்பனவு வழங்கப்படும்.பல்வேறு பிரிவுகளின் அடிப்படையில் ஒரு குடும்பத்திற்கு 3000, 5000, 8000 மற்றும் 15000 ரூபா என்ற அடிப்படையில் வங்கிக் கணக்குகளில் பணம் வைப்பிலிடப்படும் என குறிப்பிட்டுள்ளார். 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.