பரீட்சாத்திகளின் பரீட்சை நுழைவுச்சீட்டுகள் தபால் மூலம் அனுப்பி அனுப்பி வைப்பு

2022ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சைக்கான பரீட்சை நுழைவுச்சீட்டுகள் மற்றும் கால அட்டவணைகளை தபால் மூலம் அனுப்பிவைக்க ஆரம்பித்துள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, பாடசாலை விண்ணப்பதாரிகளின் நுழைவுச் சீட்டுகள் மற்றும் நேர அட்டவணைகள் தபாலில் அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

தனிப்பட்ட விண்ணப்பதாரர்களின் டிக்கெட்டுகள் மற்றும் நேர அட்டவணைகள் அவர்களின் தனிப்பட்ட முகவரிகளுக்கு அனுப்பப்படும்.

2022 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 8 ஆம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.